வீராங்கனைகளில் மிகவும் வெற்றிகரமானவர்களில் ஒருவராக மட்டுமல்லாமல்

ரியோ ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்று சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், ஒலிம்பிக்ஸ் என்ற வார்த்தையைக் கேட்டால் சிந்துவின் கண்கள் மிளிர்கின்றன.


இந்திய விளையாட்டு வீராங்கனைகளில் மிகவும் வெற்றிகரமானவர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், மிகவும் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் இருக்கிறார். சிந்து என்ற பிராண்ட் பெரிய மதிப்பு கொண்டது.


2018ஆம் ஆண்டில் உலகிலேயே அதிகம் சம்பாதித்த பெண் விளையாட்டு வீரர்களில் சிந்து 7வது இடத்தில் இருந்தார் என போர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டிருந்தது.