பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களில் 46.21 சதவீதத்தினர் இந்தியாவில் உடனடியாக வேலைக்குச் செல்லும் திறனுடன் இருப்பதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்ச்சினையாக இருப்பதாகப் பல்வேறு தரப்பிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டில் போதிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அரசு தரப்பு
அறிக்கைகளும் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன. பொருளாதார மந்தநிலை நிலவும் தற்போதைய சூழலில் வேலை உருவாக்கத்தில் அதிகக் கவனம் செலுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.